Enable Javscript for better performance
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்த முறையீடுகள் விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai