Enable Javscript for better performance
கோப்புகளை திருத்திய காவல் துறை ஊழியர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோப்புகளை திருத்திய காவல் துறை ஊழியர் பணியிடை நீக்கம்

    By அரியலூர்,  |   Published on : 12th June 2014 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோப்புகளை திருத்தியதாக அரியலூர் மாவட்ட காவல் அலுவலகக் கண்காணிப்பாளர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் யோகாம்பாள். இவர் 145 நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாராம். இவரது விடுமுறையை சரியாக பதிவுசெய்யாமலும், அவருக்கு விடுமுறை இல்லை என்றும் அரியலூர் மாவட்டக் காவல் அலுவலகக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் கோப்புகளில் தவறுதலாக பதிந்ததாகவும், கோப்புகளை திருத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில், திருச்சி சரக காவல் துணைத் தலைவர் (பொறுப்பு) சஞ்சய் குமார், பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai