Enable Javscript for better performance
லஞ்சம் கேட்ட காவல் துறை பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சம் கேட்ட காவல் துறை பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 12th June 2014 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனைவி அளித்த புகாரிலிருந்து கணவரை விடுவிக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக காவல் பெண் ஆய்வாளர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் சரவணன். இவர் பெங்களூரில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மே 11 ஆம் தேதி இவரது மனைவி எழில்மதி குடும்பத் தகராறு காரணமாக ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காமாட்சியிடம் சரவணன் மீது புகார் அளித்தார். இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி, காவல் ஆய்வாளர் காமாட்சி, சரவணனிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து சரவணன் திருச்சி டிஐஜி (பொறுப்பு) சஞ்சய்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சஞ்சய்குமார், காவல் ஆய்வாளர் காமாட்சியை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai