Enable Javscript for better performance
அரியலூர் அருகே மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் அருகே விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் கீழப்பழூவூர் திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய பேரணி

    முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியை சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ். நவாப்ஜான் தொடக்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    பேரணியில் ஆலையின் தலைவர் எம். சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் (சுரங்கம்) ஜி. ரகுநாத்சிங், ஆலையின் மூத்த

    அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்

    தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    பேரணி நிறைவில் கருப்பூர் சேனாபதி சுரங்கத்தில் ஏராளமான பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai