Enable Javscript for better performance
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 13th June 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அரியலூரில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயற்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோ. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2013- 14 ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே பணி மாறுதல், மற்றும் பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு, மறைவற்ற வகையில் உடனே நடத்திட வேண்டும் என தமிழக அரசையும், கல்வித் துறையையும் கேட்டுக் கொள்கிறோம். தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கல்வித்துறை உடனே ரத்து செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளை தமிழக அரசு அறிவித்து அதற்கும் பொது கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில அமைப்புச் செயலர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் பேசினார். மாவட்டச் செயலர் பி. பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஏ. அக்பர்கான், அரியலூர் கல்வி மாவட்டத் தலைவர் ப. மல்லிகேஸ்வரன், செயலர் எஸ். சரவணன், பொருளாளர் பி. துரைக்கண்ணு, உடையார்பாளையம் கல்வி மாவட்டச் செயலர் எல். கபிரியேல், பொருளாளர் ந. ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai