Enable Javscript for better performance
இருதரப்பினரிடையே மோதல்: 7 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே சொத்துத் தகராறு காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

    அரியலூர் அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (65). இவரது சகோதரர் தனபால் (55). இவர்களுக்கிடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நாகராஜனின் மகன் சவுந்தரராஜன்(45) பிரச்னைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளார். இதனை தனபால் மகன் ராஜ்குமார் (31) தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், தனபால் மற்றும் இவரது மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் (29) விஜயகுமாரின் மனைவி சுதா(24) ஆகிய 4 பேரும் சேர்ந்து நாகராஜன் மற்றும் சவுந்தரராஜனின் மகன் சிவா (20) மகள் சத்யா(22) ஆகிய 3 பேரையும் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

    இதேபோல் இந்த தகராறில் தனபால், ராஜ்குமார், விஜயகுமார், சுதா ஆகிய 4 பேரையும் சிவா உள்ளிட்ட 3 பேரும் செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 7 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜவேலு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai