Enable Javscript for better performance
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

    By அரியலூர்  |   Published on : 13th June 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் (ரரர.ஙர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் விண்ணப்பிப்பதற்கான கால வரையறை புதியதற்கு செப். 30 மற்றும் புதுப்பித்தலுக்கு நவ. 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித் தொகையை அரசால் 2014-15-ம் ஆண்டுக்கு வழங்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தகுதிகள்

    இந்த கல்வி உதவித் தொகையைப் பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்,

    (ரரர.ஙர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய்) என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நகலுடன் கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் (இர்ழ்ங் ஆஹய்ந் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் சன்ம்க்ஷங்ழ், ஐஊந இர்க்ங்) ஆகிய விபரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 10-10-2014-க்குள் புதியதிற்கும் 20-11-2014-க்குள் புதுப்பித்தலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளதால், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு விபரங்களையும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர் செலுத்தும் முழுக் கல்வி கட்டணங்களும் (திரும்பப் பெறும் கட்டணங்களை தவிர்த்து) வழங்கப்படும்.

    ஏனைய கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி பயில்பவருக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அதிகபட்சமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ, மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் அந்த விண்ணப்பங்களில் கையொப்பமிட்டு அத்துடன் அனைத்து சான்றுகளையும் 20-10-2014-க்குள் புதியதிற்கும், 25-11-2014-க்குள் புதுப்பித்தலுக்கும் சிறுபான்மையின நல ஆணையர், 807, அண்ணாசாலை (5 வது தளம்) சென்னை -2 என்ற முகவரிக்கு தவறாது அனுப்புதல் வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    மேலும் தகவலுக்கு சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக தொலைபேசி 044- 28523544 அல்லது 28520033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai