Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 13th June 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள கவரபாளையத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ஜெயராமன் (47). இவர் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆண்டிமடத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணன்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஜெயராமன் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai