Enable Javscript for better performance
மடிக்கணினி திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் பேருந்து நிலையத்தில் மடிக்கணினி திருடியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் அருகே உள்ள குடிசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (17).

    இவர் கடந்த 9-ம் தேதி அரியலூர் பேருந்து நிலையத்தில் தனது மடிக்கணினி மற்றும் செல்போன்களை வைத்து விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது மடிக்கணினியையும், செல்போன்களையும் மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தில் சரவணக்குமார் அளித்தப் புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிந்து பெரம்பலூர் மாவட்டம், பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜை (24) கைது செய்து அவரிடமிருந்து மடிக்கணினி மற்றும் செல்போன்களை மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai