Enable Javscript for better performance
4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 பேருக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவரி கணக்கு வருவாய் தீர்வாயம் முடிக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார்.

    இதில் குவாகம் பிர்க்காவுக்குள்பட்ட சிலம்பூர் வடக்கு, சிலம்பூர் தெற்கு, இடையக்குறிச்சி, அய்யூர், குவத்தூர் வடக்கு, குவத்தூர் தெற்கு, காட்டாத்தூர் வடக்கு, காட்டாத்தூர் தெற்கு,குவாகம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் பட்டா மாறுதல் கோரி மனு கொடுத்த 4 பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், வட்டாட்சியர் முகுந்தன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai