Enable Javscript for better performance
அரியலூரில்குண்டர் சட்டத்தில் ரவுடி கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் குண்டர் சட்டத்தில் ரவுடி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் அருகேயுள்ள பள்ளகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் சரவணன் (23). இவர் மீது அரியலூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள், குவாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளிட்ட ஏராளமான திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    இந்த வழக்குகளில் கைதாகி சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில், சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai