Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில்1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில்1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 14th June 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வாகனத்தில் இருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஜயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் யா. எலிசபெத்மேரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் தா. பாண்டியன், கணினி பதிவாளர் வீசரஞ்சித்குமார் உள்ளிட்டோர் ஜயங்கொண்டம் பகுதியில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஜயங்கொண்டம் கனரா வங்கி அருகே நின்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனையிட்டபோது, 1100 கிலோ ரேஷன் அரிசி 30 சிப்பங்களில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் எலிசபெத்மேரி, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார். மேலும், ஓட்டுநர் தர்மராஜ் மற்றும் வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai