Enable Javscript for better performance
திருமானூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திருமானூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 14th June 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமானூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுகவை இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக உருவாக்கி சாதனை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தலைவர் சீனிவாசன் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

    உறுப்பினர் சுப்பிரமணியன்: அலுவலகத்தில் பொதுநிதியில் வழங்கப்பட்ட வேலைகளுக்கு சரியான வேலை உத்தரவு வழங்காமல் வேலையை மட்டும் துரிதமாக முடிக்க அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். ஆனால், வேலைக்கான மதிப்பீடு மற்றும் வேலை உத்தரவு வழங்குவதில்லை, அலுவகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையும் கொடுப்பதில்லை. எனவே, இனிமேலாவது நடைபெறும் வேலைகளுக்கு உரிய நேரத்தில் மதிப்பீடு மற்றும் வேலை உத்தரவும் வழங்க வேண்டும்.

    இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் அமர்சிங்: தேர்தல் காரணமாக அலுவலர்கள் மாற்றுப் பணிக்கு சென்றிருந்தார்கள். அதனால் பணிகள் தாதமாக நடைபெற்றது. இனி அவ்வாறு இருக்காது துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியக்குழுத் தலைவர் சீனிவாசன்: ஒன்றியக் குழு உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். அதனால் அலுவலகத்தில் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

    உறுப்பினர் சாமிநாதன்: பளிங்காநத்தம் ஊராட்சியில் கீழத்தெருவில் 6 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சரி செய்யச் சொல்லி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனே நடவடிக்கை எடுத்து குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.

    உறுப்பினர் எழிலரசி: அன்னிமங்கலம் ஊராட்சி பாளையப்பாடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம் பல ஆண்டுகளாக திறப்பு விழா காணாமலும், மக்கள் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்: இந்த சமுதாயக் கூடம் திறப்பு விழா என்பது காரணமல்ல. கிராமத்தில் நடைபெறும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி கேளுங்கள். அவரின் அனுமதியின்பேரில் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்படுத்தலாம். தமிழக முதல்வர் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, தரமான குழாய்களை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து முதல்வரின் எண்ணம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக, துணைத் தலைவர் குமரவேல் வரவேற்றார். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் தெய்வநம்பி வாசித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai