Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

    திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கைப் பரப்புச் செயலருமான ஆ. ராசா கலந்துகொண்டு லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பயிலும் 350 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும், மாணவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான முருகேசன், ஒன்றியச் செயலர் ஜோதிவேல், செந்துறை ஒன்றியச் செயலர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai