Enable Javscript for better performance
பொதுவிநியோகத் திட்டகுறைதீர்க்கும் நாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுவிநியோகத் திட்டகுறைதீர்க்கும் நாள் கூட்டம்

    By அரியலூர்  |   Published on : 14th June 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் அரியலூர் வட்டத்துக்கு இலந்தைக்கூடம் கிராமத்திலும், செந்துறை வட்டத்துக்கு மணக்குடையானிலும், உடையார்பாளையம் வட்டத்துக்கு கல்லாத்தூரிலும் நடைபெறுகிறது.

    அரியலூர் வட்டத்துக்கு அரியலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், உடையார்பாளையம் வட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரியலூர் மண்டல மேலாளரும், செந்துறை வட்டத்துக்கு அரியலூர் மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், வட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை முன்னின்று நடத்துவார்கள்.

    கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

    எனவே, பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai