Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பதாகை: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பதாகை: ஆட்சியர்

    By அரியலூர்,  |   Published on : 14th June 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைநீர் சேகரிப்பு இயக்கம் குறித்த விழிப்புணர்வு பதாகை (பிளக்ஸ் பேனர்கள்) அரியலூர் மாவட்டத்தில் 500 இடங்களில் அமைக்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் அருகேயுள்ள வாலாஜாநகரம் ரேஷன் கடையில் மழைநீர் சேகரிப்பு குறித்து கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து ஆட்சியர் கூறியது:

    தமிழக முதல்வரின் முன்னோடித் திட்டமான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விழிப்புணர்வு பாதகைகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

    கூட்டுறவுத் துறை சார்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் 64, ரேஷன் கடைகள் 421, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 1, நகர கூட்டுறவு வங்கி 1, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் 3 ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி, கூட்டுறவு துணைப் பதிவாளர் பழனிவேலு, சார்பதிவாளர்கள் பழனியப்பன், மகாலிங்கம், நீதிமணி, ராஜகுமார், மற்றும் கூட்டுறவுச் சங்கச் செயலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai