Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜி. கருணாகரன் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். பேரணி ஜயங்கொண்டம் அண்ணாசிலையில் இருந்து புறப்பட்டு கடைவீதி, நான்குசாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

    பேரணியில் மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

    இதில் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருமாறன், காவல் உதவி ஆய்வாளர்கள் ரபீக்ஹுசேன், அசோகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai