Enable Javscript for better performance
அரியலூர் அருகே இரு இடங்களில் தீ- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே வீடு மற்றும் தைலமரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

    அரியலூர் அருகேயுள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (35). இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கரில் தைல மரம் வளர்த்து வந்தார். இந்த மரங்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. காற்று பலமாக வீசியதால் எல்லா மரங்களும் கருகின. சேத மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும். விபத்து குறித்து கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபாலன் விசாரிக்கிறார்.

    மற்றொரு விபத்து: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (52), இவர் தனது குடும்பத்துடன் வயல் வேலைக்குச் சென்று விட்டார். அப்போது அவரது வீடு தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். நீலமேகம் வந்து பார்த்தபோது அவரது வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நெக்லஸ், மற்றும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தூத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai