Enable Javscript for better performance
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு அலுவலர்கள்- Dinamani

சுடச்சுட

    

    காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு அலுவலர்கள்

    By அரியலூர்,  |   Published on : 15th June 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அலுவலர்களுக்கு அடையாள அட்டைகளை அணிவித்த அவர் மேலும் கூறியது:

    தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரியை நியமிக்கும் பணி நடைபெறுகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலையங்களிலும் 16 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பான அதிகாரி (ஙண்ள்ள்ண்ய்ஞ் டங்ழ்ள்ர்ய் கண்ஹள்ர்ம் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) என்று அழைக்கப்படுவர்.

    இதற்கான அதிகாரியும் ஙண்ள்ள்ண்ய்ஞ் டங்ழ்ள்ர்ய் கண்ஹள்ர்ம் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் என்ற பேட்ஜ் அணிந்து இருப்பர்.

    இவர்கள் அந்தந்தக் காவல் நிலையங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள பழைய வழக்குகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவர்.

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 56 பேர் காணாமல் போனதாக வழக்கு உள்ளன. இந்த வழக்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதிய புகார்கள் தொடர்பாகவும் இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வர். வரும்காலங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் நேரடியாக மேற்படி அதிகாரியை சந்தித்து புகார் கொடுக்கலாம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai