Enable Javscript for better performance
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு வார விழா- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேமிப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

    இப்பள்ளியில் கடந்த 9-ம் தேதி தொடங்கிய மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு வார விழாவில் முதல் நாள் மாணவிகள் பேரணி சென்றனர்.

    மேலும் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பள்ளி வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

    மாவட்டக் கல்வி அலுவலர் யுவராஜ் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் பழனிச்சாமி மாணவிகளுக்கு பரிசளித்தார். தலைமை ஆசிரியை சகாய தமிழரசி நன்றி கூறினார். கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai