Enable Javscript for better performance
அரியலூரில் 286 மனுக்களுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 286 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 12 முதல் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முஸ்தபா கமால் பாட்சா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் பட்டா மாற்றம் கோரி 313 மனுக்களும், அவற்றில் தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் 262-ம், விசாரணைக்காக 51 மனுக்களும், இலவச வீட்டு மனைப் பட்டா கோரி 2 மனுக்களும் பெறப்பட்டு விசாரணையில் உள்ளன.

    சிட்டா நகல் 2 சி பட்டா, குடும்ப அட்டை, இதர கோரிக்கைகள் என 419 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 286 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 133 மனுக்கள் விசாரணையில் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai