Enable Javscript for better performance
\\\"அரியலூர் மாவட்டத்தில் ரூ. 18.30 கோடி திருமண நிதி\\\'- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 18 கோடியே 30 லட்சத்தில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 426 பேருக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரத்திலான நிதியுதவி காசோலை, தலா 4 கிராம் வீதம் 1704 கிராம் தங்கக் காசுகளை வழங்கி அவர் மேலும் பேசியது:

    தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    இதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், திருமண நிதியாகவும், தாலிக்கு தங்கம் தலா 4 கிராமும் வழங்கப்படுகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்*பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் ரூ.18 கோடியே 30 லட்சம் நிதியுதவியாகவும், 22 ஆயிரத்து 860 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் துரை. மணிவேல் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி, துணைத் தலைவர் அன்பழகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் நா. சீனிவாசன் (திருமானூர்), அ. செல்வராஜ் (செந்துறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட சமூக நல அலுவலர் ப. பூங்குழலி வரவேற்றார். மாவட்ட பாதுகாப்பு அலுவலர் ஜெ. வேலம்மாள் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai