Enable Javscript for better performance
சிலைகள் கடத்தல் : கபூருக்கு காவல் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிலைகள் கடத்தல் : கபூருக்கு காவல் நீட்டிப்பு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 17th June 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதி கோயில்களில் சிலைகள் திருடுபோன வழக்கில் கைதான சுபாஷ்சந்திரகபூருக்கு ஜன.17 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள சுத்தமல்லி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த சிலைகள் திருடு போயின.

    இவ்வழக்கில் தமிழகத்திலிருந்து ஐம்பொன் சிலைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அமெரிக்காவில் விற்று வந்த பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த சுபாஷ்சந்திரகபூரை (62) இன்டர்போல் போலீஸார்

    ஜெர்மனியில் கைது செய்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இவரது காவல் முடிந்ததையடுத்து கபூரை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன் கபூரை ஜூன் 30 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். கபூர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai