Enable Javscript for better performance
சுற்றுசூழல் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

    உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் த. ஹேமலதா தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்ககல்வி அலுவலர் மதலைராஜ் தொடக்கி வைத்தார்.

    பேரணியில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரித்தல் ஆகியந குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி செங்குந்தபுரம் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

    பள்ளித் தலைமை ஆசிரியர் க. வேல்மணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கொளஞ்சி. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் த. வேல்முருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியைகள் வளர்மதி, ஹேமலதா, முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai