Enable Javscript for better performance
தீ விபத்து நிவாரண உதவி- Dinamani

சுடச்சுட

    

    திருமானூர் அருகே அண்மையில் நேரிட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு துரை. மணிவேல் எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினார்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது வீடு அண்மையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சாம்பாலாயின.

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நீலமேகத்தின் குடும்பத்தினருக்கு துரை.மணிவேல் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி, தமிழக அரசின் சார்பில் 50 கிலோ அரிசி, மற்றும் வேட்டி, சேலை, ரூ.5 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார். மேலும் அரசு சார்பில் நீலமேகத்துக்கு வீடு கட்டித் தரப்படும் என்றும் எம்எல்ஏ தெரிவித்தார்.

    திருமானூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வி, அன்பழகன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai