Enable Javscript for better performance
மயானக் கொட்டகை அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செந்துறை அருகே மயானக்கொட்டகை அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் செல்வமுருகன் ஆட்சியரிடம் அளித்த மனு: உஞ்சினி வடக்குத் தெருவில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் மயானம் செல்ல சாலை வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மயானத்துக்கு கொட்டகை, மின் விளக்கு வசதியில்லை.

    இதுகுறித்து பல முறை ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இப்பணிகளை செய்வதற்கு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே ஆட்சியர் இது விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்தில் மின்விளக்கு, மயானக் கொட்டகை அமைத்து தர வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai