Enable Javscript for better performance
மீன்சுருட்டியில் மொபெட் திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டியில் மொபெட் திருடியவரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏ.என். பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (32), விவசாயி. இவர் கடந்த 11-ம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த அவர் தனது மொபெட்டை பாப்பாக்குடி பெரிய ஏரிக்கரையில் நிறுத்தி விட்டு வயலுக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அதைக் காணவில்லை. இதுகுறித்து முருகன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீன்சுருட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (38) என்பதும் அவர் முருகனின் மொபெட்டை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து மீன்சுருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன்  புஷ்பராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai