Enable Javscript for better performance
அரியலூர் - கல்லக்குடி இருவழிப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் - கல்லக்குடி இருவழிப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

    Published on : 18th June 2014 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் - கல்லக்குடி பளிங்காநத்தம் இடையே அமைக்கப்பட்டுள்ள இருவழி அகலப் பாதையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    அரியலூரில் இருந்து வாளாடி வரை 50 கி.மீ. தொலைவுக்கு ரூ. 160 கோடியில் இரு வழியிலும் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக வாளாடியில் இருந்து கல்லக்குடி பளிங்காநத்தம் வரை பணிகள் நிறைவு பெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் அரியலூரில் இருந்து கல்லக்குடி பளிங்காநத்தம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு புதிய இருவழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்தப் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  சதீஷ்குமார் மிட்டல் செவ்வாய்க்கிழமை டிராலியில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், திட்ட மேலாளர் பிரதீப் கவுர், தலைமை நிர்வாக அலுவலர் சதீஷ், ரயில்வே விகாஸ் லிமிடெட் இணைப் பொது மேலாளர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்களும் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai