Enable Javscript for better performance
கேபிள் ஆபரேட்டர்கள் ஜூன் 20-க்குள் பணம் செலுத்த அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கேபிள் ஆபரேட்டர்கள் ஜூன் 20-க்குள் பணம் செலுத்த அறிவுறுத்தல்

    Published on : 18th June 2014 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மாதக் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் எ. சரவணவேல்ராஜ் (அரியலூர்), தரேஸ் அகமது (பெரம்பலூர்) ஆகியோர் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தற்போது உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் தங்களுடைய மாதாந்திர கட்டணத் தொகையை அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என மே 25-ம் தேதி நடைபெற்ற இந்நிறுவனத்தின் 38-வது இயக்குநர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்கள் கட்டணத்தொகையின் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது 2014 மே மாதத்துக்கான கட்டணத் தொகையை ஜூன் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 21-ம் தேதிமுதல் அந்தந்த மாதத்துக்கான நிலுவைத் தொகையின் பேரில் மாதம் ஒன்றுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் நிலுவையிலுள்ள நாள்களுக்கு கணக்கிட்டு அபராதம் வசூல் செய்யப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai