Enable Javscript for better performance
ஜூன் 20-ல் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

    கூட்டத்தில் வேளாண்துறை சம்பந்தமான தங்களது குறைகளை விவசாயிகள் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai