Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி தலைமை வகித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், மற்றும் வேன்களில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும் மழை நீர் சேகரிக்க வேண்டியதன் அவசியம், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், உள்ளிட்டவை குறித்த செயல்முறை விளக்க துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக அரியலூர் கிளை மேலாளர் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai