Enable Javscript for better performance
இளையோர் செஞ்சிலுவை சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். யுவராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தக் கல்வி ஆண்டின் நிகழ்வுகளாக ஜூலை 3 முதல் கவுன்சிலர் கூட்டம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி முகாம், செப்டம்பர் 6 ஆம் தேதி கல்விச் சுற்றுலா, அக்டோபர் 9 ஆம் தேதி இரண்டாவது கவுன்சிலர் கூட்டம், நவம்பர் பள்ளிகள் ஆய்வு, டிசம்பர் 7 ஆம் தேதி சிறந்த ஜூனியர்கள் தேர்வு, ஜனவரி 28-ல் விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்வுகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மாவட்ட அமைப்பாளரும், செயலாளருமான என். கலையரசன் கடந்த ஆண்டின் செயல்பாடுகளையும், வரவு- செலவு கணக்கையும், நிகழாண்டின் செயல்திட்டத்தையும் விளக்கினார். இணை அமைப்பாளர் சண்முகம் கடந்த ஆண்டின் செயல்பாட்டை குறும்படமாக தயாரித்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவர் அ. நல்லப்பன், செயலாளர் ஆர். பாஸ்கரன், பொருளாளர் ஏ.எம். சுப்பிரமணியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர். பழனிச்சாமி, பள்ளி துணை ஆய்வாளர் ஆர். பழனிச்சாமி, சி.எஸ்.ஐ. பள்ளித் தலைமை ஆசிரியர் பாபு லிங்கன், மண்டல அலுவலர்கள் முருகன், செந்தில்குமரன், லதா, ராஜலட்சுமி, சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai