Enable Javscript for better performance
ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

    By அரியலூர்  |   Published on : 19th June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களை அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது அரசு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுத்துறை வங்கித் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்கள்

    மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) படிவங்களை நிறைவு செய்து (துணைவருடன் உள்ள புகைப்படத்துடன்) அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்குப் பிறகு படிவத்தின் நகலை வங்கி அலுவலகத்தின் கையொப்பத்துடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai