Enable Javscript for better performance
கரும்புக்கு அரசு அறிவித்தகூடுதல் விலையை வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கு அரசு அறிவித்தகூடுதல் விலையை வழங்க வலியுறுத்தல்

    By அரியலூர்  |   Published on : 19th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கு அரசு அறிவித்த கூடுதல் விலையை வழங்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு அரசு கூடுதலாக அறிவித்த ரூ. 300 வழங்கும் வரை கோத்தாரி சர்க்கரை ஆலை முன் ஜூன் 26 முதல் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது, கம்போஸ்ட் உரத்தை விரும்பும் விவசாயிகளுக்கு மட்டும் எந்தவித ஜாமீனும் இல்லாமல் வழங்க வேண்டும்.

    கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும், கரும்பு லோடு பதிவுசெய்த தேதியை முறையாக ஆவணத்துடன் விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு அரை கிலோ சர்க்கரை இலவசமாக வழங்க வேண்டும். பதிவுசெய்த அனைத்து கரும்பையும் உரிய காலத்தில் முழுமையாக வெட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அயோத்தி வரவேற்றார். துணைத் தலைவர் யோகநாதன், ராதாகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் மணியன், விவசாய சங்க வட்டத் தலைவர் வரப்பிரசாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai