திருமானூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு
By அரியலூர், | Published on : 19th June 2014 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே லாரி மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருமானூர் அருகே உள்ள செட்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மகேஷ் (20). இவர் கீழப்பழூவூரிலிருந்து செட்டிக்குடி செல்ல பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருமானூரிலிருந்து கீழப்பழூவூர் நோக்கிச் சென்ற சிமென்ட் லாரி மோதியதில் மகேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும், மகேஷின் உறவினர்கள் கீழப்பழூவூருக்கு திரண்டு வந்து லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், சிமென்ட் லாரியின் முன்புற கண்ணாடியை அடித்து உடைத்தனர். கீழப்பழூவூர் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
இந்நிலையில் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.