Enable Javscript for better performance
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசு

    By அரியலூர்,  |   Published on : 19th June 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளியில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    செந்துறை வட்டம், சோழன்குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 6 ஆண்டுகளாக எஸ்எஸ்எல்சி தேர்வில் 100% தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய 34 மாணவர்களில், 24 பேர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர். இந்தத் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சோழன்குடிக்காடு சிவஞானம் அம்மாள் அறக்கட்டளை சார்பில், சமூக ஆர்வலர் எஸ்.எஸ். கணேசன் மாணவர்கள் ரம்யா, சூரியா, சத்தியன் ஆகியோருக்கும், ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர். விசுவநாதன், பள்ளி ஆர்வலர் எழில்மாறன், ஒன்றியக் குழு உறுப்பினர் மணிமாறன், முருகானந்தம், பாண்டியன், ஆசிரியர்கள் வீரமணி, ரமேஷ், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai