Enable Javscript for better performance
பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 19th June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வரதராஜன்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்பதற்காக உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது பேரூராட்சித் தலைவர் லாரன்ஸ் அலுவலகத்திற்கு

    வந்து செயல் அலுவலரை சந்தித்துவிட்டு உடனே வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து, செயல் அலுவலர் மாலா, பேரூராட்சித் தலைவர் அவசரமாக வெளியே செல்வதால் கூட்டம் மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைவர் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாக மன்றத்தில் ஒப்புதல் பெறாமல் பணிகளை தேர்வு செய்து டெண்டர் விட்டு, பின்னர் மன்றக் கூட்டத்தை கூட்டி கையெழுத்து கேட்பதாகவும், இதற்கு செயல் அலுவலரும் உடந்தையாகச் செயல்படுவதாகவும் கூறி பேரூராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், துணைத் தலைவர் ரோக்டேவிட்நெல்சன், உறுப்பினர்கள் சகாயஅந்தோணி, ஜெரோம், டான்போஸ்கோ, லூர்துமேரி, ஸ்டீபன்ராஜ், கனுவந்துமேரி, ஜாக்குலின் கேத்ரினால், அந்தோணிசாமி, சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai