அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது
By ஜயங்கொண்டம் | Published on : 20th June 2014 05:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மூவரை மீன்சுருட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி பகுதியில் 2 நாட்டுத்துப்பாக்கிகளுடன் மூவர் சென்றனர். தகவலறிந்த அரியலூர் திட்டமிடும் நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவகாமி மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்டோர் மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி காவெட்டேரியை சேர்ந்த பாபு மகன் பாட்ஷா (18), செல்வன் மகன் விஜய்(22) மற்றும் கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் ரவி மகன் சுபாஷ் (38) என்பதும் சுபாஷ் வைத்திருந்த துப்பாக்கிக்கு கடலூர் மாவட்ட உரிமம் உள்ளதும், விஜயின் தந்தை செல்வம் பெயரில் உள்ள துப்பாக்கியை விஜய் பயன்படுத்தியதும் தெரியவந்தது.