Enable Javscript for better performance
குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் குண்டர் சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அன்னகாரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் உதயசூரியன் (46). இவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் இவரை தா.பழூர் போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவதாலும், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், இவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் உதயசூரியனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai