Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே 6 குடிசைகள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மின் கசிவால் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கவடங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கந்தன் மனைவி வெள்ளச்சி குடிசை வீட்டில் வியாழக்கிழமை மின் கசிவால் தீப்பிடித்தது.

    இதைத் தொடர்ந்து அருகிலிருந்த தேவசுந்தரம் (40), கல்யாணசுந்தரம் (45), சண்முகம் (34) ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.

    அப்போது தேவசுந்தரம் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த மயிலம்மாள் (65) வீடும் தீப்பிடித்தது.

    தகவலறிந்த ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான குழுவினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 5 வீடுகளும் முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தன. தீயால் வீடுகளை இழந்த 5 பேர் குடும்பங்களுக்கும் அரசு உதவித்தொகை தலா ரூ. 5000-ஐ வருவாய் ஆய்வாளர் சம்பத் உடனடியாக வழங்கினார்.

    இதேபோல் மீன்சுருட்டி அண்ணாநகரை சேர்ந்த பட்டுசாமி வீடு மின்கசிவு ஏற்பட்டு முழுவதுமாக கருகியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai