Enable Javscript for better performance
தட்டுப்பாடின்றி தபால்தலை கிடைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தட்டுப்பாடின்றி தபால்தலை கிடைக்க வலியுறுத்தல்

    By அரியலூர்  |   Published on : 20th June 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத் தபால் தலைகளும் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் சோழன்குடிக்காடு எஸ்.எஸ். கணேசன் முதன்மை அஞ்சல் துறை தலைவருக்கு அனுப்பிய மனு:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஜயங்கொண்டம், மற்றும் செந்துறை உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 3 மாதங்களாக ரூ. 2, ரூ. 3, ரூ. 5, ரூ. 10 தபால் தலைகள் இருப்பு இல்லை. இதனால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் ரூ. 1 ரெவின்யூ தபால் தலையும் இல்லை.

    எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக தபால் தலை, கவர்களை அனைத்துத் தபால் நிலையங்களுக்கும் வழங்கிட வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai