Enable Javscript for better performance
திருச்சி தொகுதியில் 29 வேட்பாளர்களும் செலவு கணக்கு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி தொகுதியில் 29 வேட்பாளர்களும் செலவு கணக்கு தாக்கல்

    By திருச்சி  |   Published on : 20th June 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட 29 வேட்பாளர்களும் தங்களது வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரனிடம் ஜூன் 15-ம் தேதிக்குள் செலவு கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இதன்படி திருச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேரும் தங்களது வரவு- செலவு கணக்கு அறிக்கையை உரிய நேரத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) வெ. இந்திராணி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai