Enable Javscript for better performance
சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 21st June 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் வேலாயுதநகர் சென்னை - கும்பகோணம் சாலையில் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சின்னப்பன் என்பவர், ஒரே இடத்தில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவர் தனது இடம் முழுவதும் கட்டடம் கட்டிவிட்டு, நெடுஞ்சாலைத்துறை எல்லையை ஆக்கிரமித்து செப்டிக் டேங்க், ஆழ்குழாய் கிணறு, மாடிப்படி, சுற்றுச்சுவர் கட்டியுள்ளாராம். மேலும், இவரது வாடகை வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரையும், செப்டிக் டேங்கிலிருந்து வெளியேறும் கழிவுநீரையும் நெடுஞ்சாலையோரம் விடுவதால், எந்த நேரமும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து கடந்த 2010-ம் ஆண்டில் இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த இடம் அளக்கப்பட்டு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. மேலும், கட்டட உரிமையாளர் சின்னப்பனிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. வழக்கம்போல், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சென்னை - கும்பகோணம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சம்பத், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai