Enable Javscript for better performance
\\\"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும்'

    By அரியலூர்,  |   Published on : 21st June 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணியன் பேசும்போது, அரியலூர் பேருந்து நிலையத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. ஆனால் அரசின் சார்பில் "அம்மா' குடிநீர் என பாட்டிலில் அடைத்து 10 ரூபாய் விலைக்கு விற்கிறார்கள் என்றார்.

    இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக பிரமுகர் நீதி நெப்போலியன் பேசினார்.

    உடனே குறுக்கிட்ட கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க பிரமுகர் உலகநாதன் மணியன் பேசுவது தவறில்லை என்றார்.

    இதனால் உலகநாதனுக்கும், நீதி நெப்போலியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், இங்கு அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும். வேறு பொருள்கள் பற்றி பேசக் கூடாது.

    இதேபோல் கூட்டத்தை நடத்த விடாமல் செய்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணியனிடம் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai