Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு

    By அரியலூர்  |   Published on : 22nd June 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கு கடன் திட்ட மதிப்பீட்டுக்கான அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 2014-15-ம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் செறிவு கடன் திட்ட மதிப்பீடு ரூ. 1385.61 கோடி மதிப்பிலான கையேட்டினை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் பேசியது: அரியலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், விரிவாக்க சேவை மையங்களின் செயல்பாடு, பெருகிவரும் தொழில்நுட்ப பரிமாற்றம், வங்கிகளின் நிதி ஆதாரம், ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நபார்டு செறிவு சார் கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2014-15 ஆம் ஆண்டுக்கு விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு ரூ. 1001.85 கோடியும், வீட்டுக்கடன், கல்விக்கடன் இதர கடனாக ரூ. 115.33 கோடியும், பண்ணைசாரா தொழில்களுக்கு ரூ. 268.43 கோடியும், மற்றும் இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 61.80 கோடியும், என மொத்தம் ரூ. 1385.61 கோடி நபார்டு வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மேலும் இந்தத் திட்ட அறிக்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள எல்லா வங்கிகளும் இந்தத் திட்ட அறிக்கையை பின்புலமாகக் கொண்டு அடுத்த

    ஆண்டுக்கான அவர்களது கடன் திட்டங்களை தயாரிப்பார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் சீதாராமன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சாமுவேல் இன்பதுரை, நபார்டு வங்கி மேலாளர் கோதண்டபாணி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai