Enable Javscript for better performance
உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் டி. பழனியாண்டி தலைமை வகித்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை தபால் துறை மூலம் உதவித் தொகை வந்தது.

    ஆனால் தற்போது உதவித் தொகையை வங்கிகள் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக உதவித் தொகை வழங்குவதில் தாமதம் நிலவுகிறது.

    இதனால் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாதாந்திர உதவித் தொகையை கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 200 நாள் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், அவர்களுக்கு தகுந்த வேலையே வழங்கிட வேண்டும். ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு கிராம ஊராட்சித் தலைவர்களும் அந்தந்த கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் டி. கொளஞ்சிநாதன், கோவிந்தராஜ், கருப்புசாமி, கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செயலாளர் ஆர். அன்பழகன் வரவேற்றார். மணிகண்டன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai