Enable Javscript for better performance
ஊராட்சி அளவிலானக் குழு கூட்டமைப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி அளவிலானக் குழு கூட்டமைப்புக் கூட்டம்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 22nd June 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் கச்சிபெருமாள் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மறுசீரமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். இதில் அரியலூர் மாவட்ட புதுவாழ்வு திட்ட உதவி திட்ட மேலாளர் சுரேஷ் பங்கேற்று கிராமப்புறங்களில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்.

    இதில் 24 சுய உதவிக்குழுக்கள் கொண்ட குழு கூட்டமைப்புக்கு தலைவராக சுதா சிவக்குமார், செயலராக வெண்ணிலாராஜா, பொருளாளராக தேவி அசோக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    முன்னதாக சுரேஷ் வரவேற்றார். அணித் தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai