Enable Javscript for better performance
அரியலூர்  அருகேமொபெட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர்  அருகேமொபெட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

    By அரியலூர்  |   Published on : 23rd June 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

    பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (40), விவசாயி.

    இவர் கடந்த 12 ஆம் தேதி இரவு அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரிலிருந்து அரியலூர் நோக்கி தவுத்தாய்குளம் அருகே வந்தபோது மொபெட்டில் இருந்து தவறி  விழுந்தார்.

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சனிக்கிழமை (ஜுன் 21) உயிரிழந்தார்.

    இதுகுறித்து முருகேசனின் மகன் மணீஷ்குமார் (19) அளித்த புகாரின்பேரில் அரியலூர் காவல் நிலையத்தினர் விசாரிக்கிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai