Enable Javscript for better performance
அரியலூர் கடைகளில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் நகரில் கடைகளில் சார்ஆட்சியர் சந்திரசேகர்சகாமூரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சகாமூரி தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் அரியலூர் மார்க்கெட் தெரு, சின்னக்கடைத் தெரு, வெள்ளாளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் பொருள்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்த தின்பண்டங்கள், அழகுச் சாதனப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகளையும் அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.  மேலும் இதுபோன்ற பொருட்கள் விற்கும் வணிகர்கள் மீது உணவுப் பொருள் தடைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சார் ஆட்சியர் எச்சரித்தார்.

    மேலும் மார்க்கெட் தெரு, தேரடி பகுதிகளில் உள்ள முட்புதர்கள் மற்றும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்தப் பணி நடந்து கொண்டிருந்தபோதே கடைகளின் முன் போடப்பட்டிருந்த கொட்டகைகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றினர்.

    பின்னர் சார் ஆட்சியர் கூறும்போது,  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி  தொடங்கும்  முன்பு வணிகர்கள்  ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும், நகரைத் தூய்மை செய்யும் பணியில் வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai