Enable Javscript for better performance
காவலர்களுக்கு கண் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

    ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வின்சென்ட் ஜயராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    முகாமில் அகர்வால் கண் மருத்துவமனைக் குழுவினர் பங்கேற்று 116 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 26 பேருக்கு கண்புரை நோய் இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai